மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல்வரின் மகள் கடத்தல்? என்ன நடக்கிறது? அதிரடியில் இறங்கிய காவல்துறை!
Mr. முதல்வர் உங்கள் மகளை நாங்கள் கடத்த போகிறோம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வந்த மிரட்டல் ஈமெயிலால் டெல்லியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் முதல்வராக இருப்பவர் ஆம் ஆத்மீ கட்சியை சேர்ந்த திரு. கெஜ்ரிவால் அவர்கள்.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி அன்று டெல்லி முதல்வர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், 'உங்கள் மகள் ஹர்ஷிதாவைக் கடத்தப் போகிறோம். அவரைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறீர்கள்?' என்று எழுதப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் அலுவலகம், இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தது. மேலும் முதல்வரின் மகள் ஹர்ஷிதாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த மிரட்டல் மெயிலை யார், எங்கிருந்து அனுப்பியது என்பது குறித்து டெல்லி சைபர் க்ரைம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.