மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன் கூகுளில் அதிகம் தேடிய அந்த ஒருவார்த்தை..! அது என்ன வார்த்தை தெரியுமா.?
இளம் நடிகர் சுஷாந்த் சிங்க் இறப்பதற்கு முன் இணையத்தில் அதிகம் அவர் தேடிய வார்த்தைகள் என்னவென்ற தகவலை மும்பை போலீசார் பகிர்ந்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் இளம் நடிகர் சுஷாந்த் சிங். இவர் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். மனஅழுத்தம் காரணமாக சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
இருப்பினும் சுஷாந்த் மரணத்தில் பெரும் மர்மம் இருப்பதாகவும், சிபிஐ விசாரணை தேவை எனவும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் என்னென்ன வார்த்தைகளை கூகிள் தேடுபொறியில் அதிகம் தேடியுள்ளார் என்ற பட்டியல் தற்போது மும்பை காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.
வலியில்லா மரணம் (painless death), இருதுருவ நோய் என்கிற மனநலக் குறைபாடு (bipolar disorder), மனச்சிதைவு (schizophrenia) ஆகிய வார்த்தைகளை சுஷாந்த் சிங் இணையத்தில் அதிகம் தேடியுள்ளார். மேலும் தன்னை பற்றிய செய்திகளையும் இணையத்தில் அதிகம் தேடியுள்ளார் சுஷாந்த் சிங்.