ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
மனைவியின் நடத்தையில் சந்தேகம்; ஆத்திரத்தில் 2 மகன்களை கொலை செய்த தந்தை...!
கர்நாடகா மாநிலம் ராயத்தூர் மாவட்டம் ஜக்லேரதொட்டி கிராமத்தில் வசித்து வருபவர் லிங்கண்ணா. இவருக்கு மனைவி மற்றும் சிவராஜ் (5), ராகவேந்திரா (3) ஆகியமகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் தனது மனைவிக்கும் அதே கிராமத்தில் வசிக்கும் ஒரு இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக லிங்கண்ணா சந்தேகப்பட்டார். இதனால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
எனவே அவரது மனைவி கோபித்துக் கொண்டு மகன்களை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதை தொடர்ந்து நேற்று முன் தினம் லிங்கண்ணா தனது மாமியார் வீட்டிற்கு சென்று தனது மனைவியை பார்த்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.
மனைவி வர மறுத்ததால் தனது இரு மகன்களையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டில் இருந்த லிங்கண்ணாவிற்கு மனைவி மீது கடுமையான ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவர் தனது மகன்கள் இருவரையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். லிங்கண்ணாவின் வீட்டில் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர்.
அவர்கள் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லிங்கண்ணா அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்றார். குழந்தைகள் இருவரும் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் லிங்கண்ணாவை மடக்கி பிடித்து தேவ துர்கா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தேவதர்கா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து லிங்கண்ணாவே கைது செய்தனர்.