அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
16 வயது சிறுமி 4 சிறார்கள், காதலனால் பாலியல் பலாத்காரம்.. வாட்ஸப்பில் லீக்கான வீடியோ.. அதிரவைக்கும் சம்பவம்.!
காதலால் ஏமாற்றப்பட்ட சிறுமி காதலனால் பலாத்காரம் செய்யப்பட்டு, அவனின் 4 நண்பர்களால் சீரழிக்கப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. அறியாத வயதில் பருவகாதலில் விழுந்த சிறுமிக்கு நேர்ந்த துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜனகன் மாவட்டம், ஸ்ரீபடிப்பள்ளி, சில்பூர் மண்டல் கிராமத்தில் 16 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். சமீபத்தில் சிறுமி இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது போன்ற வீடியோ வைரலானது. இந்த விடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியை அதே பகுதியில் வசித்து வரும் குர்ராம் ஷியாம் (வயது 19) என்பவன் காதலிப்பதாக நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய காமுகன் அத்துமீறி நடந்துள்ளான்.
இதனை வீடியோவாக பதிவு செய்தவன், தனது 4 நண்பர்களுக்கும் தெரிவித்து இருக்கிறான். அவர்கள் நால்வரும் 18 வயதுக்கு கீழ் இருக்கும் சிறார்கள் ஆவார்கள். இந்த காமுகர்களும் சிறுமியிடம் விடியோவை காண்பித்து மிரட்டி அத்துமீறி இருக்கின்றனர். காதலன், அவனின் நண்பர்கள் என 5 பேரும் வெவ்வேறு சூழ்நிலையில் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்கள்.
இதற்கிடையில், சிறுமி பலாத்காரம் செய்யப்படும் வீடியோ வாட்சப் உட்பட அனைத்து சமூக வலைத்தளத்திலும் வெளியாகியுள்ளது. இதன்பின்னரே மகள் அனுபவித்து வரும் துயரம் பெற்றோருக்கு தெரியவந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போக்ஸோவில் அதிகாரிகள் வழக்குப்பதிந்தனர்.
இதனையடுத்து, முக்கிய குற்றவாளியான சிறுமியை காதலில் வீழ்த்தி பலாத்காரம் செய்த குர்ராம் ஷியாம் கைது செய்யப்பட்டான். அவனது வாக்குமூலத்தின் பேரில் தலைமறைவாக இருந்த 4 சிறார்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.