35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
சமூக ஆர்வலராக நடித்து செய்யுற வேலையா இது?.. கணவன் - மனைவி கைது.. விசாரணையில் பகீர் தகவல்.!
சமூக ஆர்வலராக இருந்து வந்த ஷில்பா சவுத்திரி மற்றும் அவரது கணவர் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தை சார்ந்த சமூக ஆர்வலர் ஷில்பா சவுத்திரி. இவரது கணவர் தெள்ள கிருஷ்ண ஸ்ரீனிவாஸ் பிரசாத். இவர் ரியல் எஸ்டேட் தொழில் முதலீடு செய்து, வட்டியாக அதிக பணம் தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றி இருக்கிறார்.
சைபராபாத் காவல் எல்லைக்குட்பட்ட நரசிங்கி காவல் நிலையத்தில் ஷில்பா சவுத்திரி (வயது 46), பிரசாத் (வயது 56) ஆகியோரின் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் தன்னிடம் ரூ.1.05 கோடி பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக பெண் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஷில்பா நடத்தும் பார்ட்டியில் கலந்துகொள்ளும் பிரபலமான நபர்களிடம் ஆசை வார்த்தை கூறி, அவர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளது அம்பலமான நிலையில், பணத்தை கேட்டதற்கு பவுன்சர்களை வைத்தும் மிரட்டி இருக்கின்றனர். தற்போது வரை வந்துள்ள புகார்களின் பேரில், ரூ.6 கோடி வரை தம்பதிகள் ஏமாற்றி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்த பாதிக்கப்பட்ட 3 பெண்களும் ஷில்பா மற்றும் அவரது கணவரின் மீது மோசடி புகார்களை பதிவு செய்துள்ளனர். இதனால் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும், ஷில்பா தன்னை சமூக ஆர்வலர் போல காண்பித்துக்கொண்டதால், திரைத்துறையை சார்ந்த நபர்களின் அறிமுகமும் ஏற்பட்டுள்ளது. அவர்களும் மோசடியில் ஏமாற்றப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.