மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாரடைப்பால் 15 வயது சிறுவன் பரிதாப பலி: பள்ளி வளாகத்திலேயே சுருண்டு விழுந்து சோகம்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நாராயணபேட், தன்வாடா பழங்குடியினர் குருகுலப்பள்ளியில் பயின்று வரும் மாணவர் ஸ்ரீகாந்த் (வயது 15).
சம்பவத்தன்று ஸ்ரீகாந்த் தனது பள்ளிக்கு சென்றபோது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். பதறியபடி அவரை மீட்ட ஆசிரியர்கள், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
அங்கு ஸ்ரீகாந்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்பதை தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுவனின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மாரடைப்பு காரணமாக சிறுவன் பள்ளி வளாகத்திலேயே பலியானது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.