நின்ற லாரி மீது மோதிய கார்; அதிவேகத்தில் பாய்ந்து சோகம்.. 6 பேர் பரிதாப பலி.!



Telangana Suryapettai Lorry Car Crash 6 Died

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சூரியபேட்டை பகுதியில், சாலையோரம் லாரி ஒன்று பழுதாகி நின்றுகொண்டு இருந்தது. இந்நிலையில், பழுதாகி நின்ற லாரி மீது, அவ்வழியே பயணித்த கார் அதிவேகத்தில் மோதி விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்த்த 6 பேர் பலியாகினர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், விபத்தில் பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் சந்திரராவ் என்பவரின் குடும்பம் என்பது உறுதியானது. 

கம்பம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள குண்டலா பகுதியில் உள்ள தேவாலயத்தில் முடிகாணிக்கை செலுத்திவிட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. படுகாயமடைந்த இருவரிடம் மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.