மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடப்பாவி... 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது.!
அசாம் மாநிலத்தைச் சார்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் அமைந்துள்ள காமரூப் என்ற பகுதியைச் சார்ந்த 16 வயது மாணவி தனது செல்போனை ரீசார்ஜ் செய்வதற்காக நான்கு நாட்களுக்கு முன்பு வெளியே சென்று இருக்கிறார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் நேற்று அவரது உடல் சோனாபூரில் உள்ள திகரு ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . மேலும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் காவல் நிலையம் முன்பாக குற்றவாளிகளை விரைந்து பிடிக்க கோரி போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த கொடூர கொலையை செய்த ஆட்டோ டிரைவரை அசாம் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்.