மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
10 ஆயிரத்துக்காக மனைவியை எரித்து கொன்ற கொடூரன்..!
ஒடிசா மாநிலம், கேந்திரபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரஜா கிஷோர் தாஸ். இவரது மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு ஒரு கலர் டிவியும் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாயும் கூடுதலாக தரும்படி ரஞ்சிதாவின் பெற்றோரிடம் பிரஜா கேட்டுள்ளார்.
இதனை அவர்கள் கொடுக்காததால் ஆத்திரமடைந்த பிரஜா, ரஞ்சிதாவை துன்புறுத்தியுள்ளார். பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ரஞ்சிதாவை கடுமையாக தாக்கிய பிரஜா அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதன் காரணமாக தீயில் வெந்த ரஞ்சிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ரஞ்சிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வரதட்சணை கொடுமையால் தீ வைத்து எரிக்கப்பட்டது குறித்து ரஞ்சிதாவின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ரஞ்சிதாவை கொடுமை செய்ததுடன் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற பிரஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கேந்திரபுரா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. ரஞ்சிதாவை வரதட்சணை கேட்டு கொடுமை செய்த பிரஜா, அவரை எரித்துக் கொன்றது உறுதியானது. இதனையடுத்து, பிரஜாவுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.