மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவி என்று கூறி 2 வருடங்களாக சிறுமியை; பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது...!
திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த இரண்டு வருடங்களாக சிறுமியை உடல் ரீதியாக துன்புறுத்திய நபர் கைதுசெய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூரில் திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் வாலிபர் ஒருவர் சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசையாக பேசி கடந்த இரண்டு வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால், உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், தனக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் தன்னை அவரது மனைவி என்று அழைப்பதாகவும், இரண்டு வருடங்களாக தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அந்த சிறுமி காவல்துறையினரிடம் கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின் அடிப்படையில், குழந்தைகள் பாலியல் குற்றங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (போக்சோ) காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர்.