அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்த கல்லூரி பேராசிரியர்.! நம்பி குடித்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.!
மும்பையில் தேர்வு பயிற்சி நிறுவனத்தை நடத்தும் ஒரு பெண்ணும் ,உதய்பூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் நீரஜ் என்பவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகநூலில் நண்பர்கள் ஆகியுள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரும் அடிக்கடி சாட்டிங் செய்துள்ளனர்.
இவர்களது பழக்கம் சற்று நெருக்கமான நிலையில், நீரஜ் அந்த பெண்ணை நேரில் சந்திக்க உதய்பூருக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து அவரின் பேச்சை நம்பி உதய்ப்பூருக்கு சென்றுள்ளார் அந்த பெண். அங்குவந்த பெண்ணிற்கு நீரஜ் குளிர்பானத்தை கொடுத்துள்ளார். அதை குடித்த பின்னர் அப்பெண்ணுக்கு போதை ஏறியது, அதை பயன்படுத்தி நீரஜ் அவரை பலாத்காரம் செய்துள்ளார்.
பிறகு மயக்கம் தெளிந்து அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை உணர்ந்தார். பின்னர் இந்த கொடூர செயலை செய்த நீரஜ் மீது அந்த ஊர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பலாத்கார புகார் கொடுத்தார். இது தொடர்பாக அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நீரஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நீரஜ் கொடுத்த குளிர்பானத்தில் போதை மருந்து கலந்திருந்தது தெரியவந்துள்ளது.