மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எங்க அம்மாவை பிடிச்சி ஜெயில்ல போடுங்க மேடம்!: வைரலாகும் சிறுவனின் கம்ப்ளெய்ண்ட் வீடியோ..!
மத்திய பிரதேசம், புர்ஹான்பூர் பகுதியில் 3 வயது சிறுவன் தன் தாயிடம் சாக்லேட் கேட்டு அடம்பிடித்ததாகவும், அவர் சாக்லேட்டுகளை ஒளித்து வைத்துக் கொண்டு சிறுவனுக்கு தர மறுத்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த சிறுவன் தன் தந்தையிடம் தாய் தனது சாக்லேட்களை திருடி ஒளித்து வைத்துள்ளதாகவும் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளான்.
சிறுவனின் இந்த செயலை கண்டு அவனது பெற்றோருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. மேலும் சிறுவன் நீண்ட நேரம் வற்புறுத்தியதால் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். காவல் நிலைய துணை ஆய்வாளர் பிரியங்கா நாயக் என்பவர் அப்போது பணியில் இருந்துள்ளார். அவரிடம் சென்ற சிறுவன் தனது தாய் சாக்லேட்டுகளை திருடியதாக புகார் அளித்தான்.
சிறுவன் வீட்டில் நடந்தவற்றை காவல் நிலைய துணை ஆய்வாளரிடம் கூற அதனை அவர் பதிவு செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#MadhyaPradesh#Burhanpur@BurhanpurPolice
— Sweta Gupta (@swetaguptag) October 17, 2022
मम्मी मेरी सारी चॉकलेट चुरा लेती है, उसको जेल भेज दो...मासूम पहुंचा थाने pic.twitter.com/EWMqM01L9k
சிறுவன் தன் தாய் குறித்து தொடர்ந்து புகார் கூற, அங்கிருந்த அனைவரும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தது குறிப்பிடத்தக்கது.