#Breaking: திருவள்ளூரில் இரயிலை கவிழ்க்க திட்டமிட்ட சதி? அம்பலமாகப்போகும் அதிர்ச்சி உண்மை... விபரம் உள்ளே.!



Thiruvallur Ponneri Express train Derailed Case Investigation today Update 


கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் இருந்து பீகார் மாநிலம் நோக்கி பயணித்த பாக்மதி விரைவு இரயில், கடந்த அக்.11 அன்று மாலை நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, கவரப்பேட்டை பகுதியில் விபத்தில் சிக்கியது. மெயின் லைனில் சென்றுகொண்டிருந்த இரயில், லூப் லைனில் நின்ற சரக்கு இரயில் மீது மோதி விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் 30 க்கும் அதிகமான பயணிகள் மட்டும் காயம் அடைந்தனர், எஞ்சியோர் நலமுடன் இருந்ததைத்தொடர்ந்து, அவர்கள் வேறொரு இரயில் உதவியுடன் பயணத்தை தொடர்ந்தனர். இந்த விபத்து குறித்து இரயில்வே அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர். 

போல்ட் - நட்கள் கழற்றப்பட்டது  

இரயில்வே இருப்புப்பாதை காவல்துறையினரும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில், தண்டவாளத்தில் போல்ட், நட்டுகள் கழற்றப்பட்டு இருந்தது. லைன்களை பிரித்து வழங்கும் அமைப்பில் இருந்த முக்கிய கருவிகளும் அரைகுறையாக அகற்றப்பட்டு இருந்தது. 

இதையும் படிங்க: அரசு மருத்துவமனைக்குள் கட்சி பெயரைச் சொல்லி அடாவடி; வார்தைப்போரில் மல்லுக்கட்டிய மருத்துவர்..! விதும்பி நின்ற சிறுமி.! 

இதனால் இரயிலை கவிழ்க்க சதி நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. சுமார் 40 க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் வழங்கப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று கூடுதலாக 10 பேருக்கு சம்மன் வழங்கி விசாரணை நடத்தப்பட்டது. முன்னாள் ஊழியர்கள், இந்நாள் ஊழியர்கள் என அனைவரும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டனர். 

3 நிமிட இடைவெளியில் சாத்தியமா?

இதனிடையே, இன்று சம்பவத்தன்று சூலூர்பேட்டை பயணிகள் இரயில் கடந்து சென்ற 3 நிமிட இடைவெளிக்கு பின்னர் எக்ஸ்பிரஸ் இரயில் இவ்வழித்தடத்தில் பயணம் செய்துள்ளது உறுதியானது. இதனால் 3 நிமிட இடைவெளியில் போல்ட் நட்டுகளை எப்படி கழற்றியிருக்க முடியும்? என்ற சந்தேகம் எழுந்தது. இதற்காக இரயில்வே ஊழியர்களை வைத்து போல்ட் நட்டுகளை கழற்றி பார்த்தபோது 11 நிமிடம் பிடித்துள்ளது. 

இதனால் போல்ட் நட்டை தண்டவாளத்தில் இருந்து கழற்றியுள்ளது இரயில்வே பணியாளர்களாக அல்லது அதற்கான பயிற்சி பெற்ற நபர்களாக இருக்கலாம் என்பதை உறுதி செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையும் ஏறக்குறையாக நிறைவுபெறும் தருவாயில் இருப்பதாக கூறப்படும் நிலையில், விரைவில் இந்த செயலில் ஈடுபட்ட குற்றவாளி கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபத்து அன்று எடுக்கப்பட்ட காணொளி 

இதையும் படிங்க: எச்சரிக்கையை மீறி மெரினாவில் ஆனந்த குளியல்.. இன்பசுற்றுலா இறுதிச் சுற்றுலாவான சோகம்.! கல்லூரி மாணவர் பலி.!