அரசு மருத்துவமனைக்குள் கட்சி பெயரைச் சொல்லி அடாவடி; வார்தைப்போரில் மல்லுக்கட்டிய மருத்துவர்..! விதும்பி நின்ற சிறுமி.! 



in Kallakurichi Govt Hospital Majlis Party Supporter Atrocity 

 

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில், கருணாபுரம் பகுதியை சேர்ந்த முஜிபுர் ரகுமான், தனது மகளை காது பகுதியில் உள்ள கட்டி தொடர்பாக சிகிச்சைக்கு அழைத்து வந்து அனுமதித்துள்ளார். அப்போது, பெண்கள் பிரிவில் பணியாற்றி வரும் மருத்துவர், அவருக்கு சோதனை செய்துள்ளார். 

பெண் மருத்துவரின் கோரிக்கை

அச்சமயம், முஜிபுர் ரகுமான் பெண் மருத்துவரிடம், செல்போனில் தான் முந்தையை சிகிச்சை விபரங்களை போட்டோ எடுத்து வைத்துள்ளதாகவும், அதனை பார்க்குமாறும் கூறியுள்ளார். பெண் மருத்துவரோ, பாப்பா இங்கே தானே இருக்கிறார். நான் நேரடியாக பார்த்துக்கொள்கிறேன், பரிசோதனை செய்கிறேன், பொறுங்கள். தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறி இருக்கிறார். 

இதையும் படிங்க: எச்சரிக்கையை மீறி மெரினாவில் ஆனந்த குளியல்.. இன்பசுற்றுலா இறுதிச் சுற்றுலாவான சோகம்.! கல்லூரி மாணவர் பலி.!

மருத்துவமனை வளாகத்திற்குள் வாக்குவாதம்

இதனால் ஆவேசமான ரகுமான், பெண் மருத்துவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். மருத்துவமனை வளாகத்திற்குள் அவர் ஆவேசமாக கத்த, சத்தம் கேட்டு வந்த மருத்துவர் கணேஷ், இது மருத்துவமனை வளாகம் என்பதால், சற்று அமைதியாக பேசுமாறு கோரிக்கை வைத்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத ரகுமான், தனது ஆதரவாளர் ஒருவரை வீடியோ எடுக்கச் சொல்லி உரத்த குரலில் பேசத் தொடங்கினார்.

வார்தைப்போர்

இதனால் நிலைமையை புரிந்துகொண்ட மருத்துவர், எதிர்தரப்பு வீடியோ எடுத்த கேமிராவை நோக்கி தனது வாதத்தையும் முன்வைத்தார். மேலும், அவர் பணி செய்யவிடாமல் தடுக்கிறார், மிரட்டல் விடுக்கிறார் என போட்டா-போட்டியாக பேசினார். அப்போது, ரகுமான் தன்னை மஜ்லீஸ் கட்சியின் மாநில இணை பொதுச் செயலாளர் என அறிமுகம் செய்து வாதத்தை தொடர்ந்தார். ரகுமான் தனது ஆவேச குரலை கடைசி வரை விடாததால், அவரை கைத்தாங்கலாக அழைத்துச்சென்று மருத்துவமனை வாசலில் கொண்டுசென்று விட்டு வந்தார். 

காவல்நிலையத்தில் புகார்

மருத்துவமனை வளாகத்திற்குள் கட்சிப் பெயரை சொல்லி தகப்பனார் கத்திக்கொண்டு இருக்க, சிகிச்சை பெற வந்த மகளோ செய்வதறியாது தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர் கணேசன், ரகுமான் என மூன்று தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: "கண்டா வரச்சொல்லுங்க" - மதுரை எம்.பி வெங்கடேசனுக்கு எதிராக போஸ்டர்.. காரணம் என்ன?.!