மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தடைசெய்யப்பட்ட டிக்டாக் செயலியின் தற்போதைய நிலை என்ன.? தகவல்கள் விற்கப்பட்டதா..? டிக்டாக் இந்தியா தலைவர் தகவல்.!
இந்திய பயனர்களின் தகவல்களை எந்தவொரு வெளிநாட்டு அரசுடனும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும், எதிர்காலத்திலும் பகிரமாட்டோம் எனவும் டிக்டாக் இந்தியாவின் தலைவர் நிகில் காந்தி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகவும், இந்திய பயனர்களின் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி இந்திய அரசு கடந்த மாதம் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை தடைசெய்தது.
இந்த செயலிகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டு ஒரு மாத காலம் ஆகிவிட்டது. இந்நிலையில் டிக்டாக் இந்தியாவின் தலைவர் நிகில் காந்தி, "எந்த ஒரு காரணத்திற்காகவும் டிக் டாக் நிறுவனம் அதன் பயனர்களின் தகவல்களை மற்ற நாடுகளுடன் பகிராது எனவும், இதுவரை எந்தவொரு வெளிநாட்டு அரசுடனும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும், எதிர்காலத்திலும் பகிரமாட்டோம்" எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசுடன் எங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுக்கவும், அரசுக்கு பாதுகாப்பு குறித்த தகவல்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.