மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுவனின் வாய்க்குள் தொங்கிய பாம்பு.! ஓடிப்போய் பார்த்த அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.! பரபரப்பு சம்பவம்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் கிடந்த குட்டி பாம்பு ஒன்றை கடித்து விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டம் போலாப்பூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது எதையோ எடுத்து வாய்க்குள் போடுவதை அவரது தாயார் பார்த்துள்ளார்.
மகன் எதை எடுத்து தனது வாய்க்குள் போடுகிறான் என அவரது தாய் ஓடிவந்து பார்த்தபோது அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த பக்கமாக வந்த குட்டி பாம்பு ஒன்றை பிடித்து அதை இரண்டு துண்டுகளாகக் கடித்துள்ளான்.
பாம்பு மிகவும் குட்டியாக இருந்ததால் சிறுவன் கடித்த உடனே உயிரிழந்துள்ளது. மேலும் தனது தாய் வருவதற்குள் பாம்பின் சில துண்டுகளை சிறுவன் விழுங்கிவிட்ட நிலையில் சில துண்டுகளை அவனது வாயிலிருந்து அவனது தாய் வெளியே எடுத்துள்ளார்.
பின்னர் சிறுவனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதனை அடுத்து சிறுவனுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதோடு அவனது வயிற்றில் இருந்த பாம்பு துண்டுகளையும் மருத்துவர்கள் வெளியே அகற்றியுள்ளனர்.
சிறுவன் கடித்த பாம்பு அதிக விஷத்தன்மை கொண்டது எனவும், சரியான நேரத்தில் சிறுவனை அழைத்து வந்ததால் அவனது உயிரைக் காப்பாற்ற முடிந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.