மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமிகளுக்கு மர்ம உறுப்பில் மிளகாய் தூள் தூவி சித்திரவதை செய்த கொடூரம்!.
டெல்லியில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் அங்குள்ள ஊழியர்களாலையே பலர் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம்ங்கள் அம்பலமாகியுள்ளன. இது தொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த வியாழனன்று பெண்கள் ஆணைய உறுப்பினர்கள் டெல்லியில் அமைந்துள்ள குறிப்பிட்ட சிறுமிகள் காப்பகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர் பெண்கள் ஆணையம் உறுப்பினர்கள்.
இதில் அங்குள்ள 6 முதல் 15 வயது வரையான சிறுமிகளுடன் மேற்கொண்ட விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த காப்பகத்தின் கட்டுப்பாடுகளை மீறும் சிறுமிகளுக்கு கடுமையான தண்டனைகளை காப்பக ஊழியர்கள் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
அந்த காப்பகத்தில் இளம்பெண்களை துணி துவைப்பதற்கும், அறைகளை சுத்தம் செய்வதற்கும், கழிவறை சுத்தம் செய்வதற்கும் கட்டாயப்படுத்தியுள்ளனர். அந்த காப்பகத்தில் உள்ள 22 சிறுமிகளுக்கும் ஊழியர்களுக்கும் ஒரே ஒரு சமையல்காரரே பணியில் இருந்துள்ளார்.
மேலும் கொடூர தண்டனையாக சிறுமிகளுக்கு மர்ம உறுப்பில் மிளகாய் தூள் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது . இதனையடுத்து டெல்லி பெண்கள் ஆணையம் இதுகுறித்து தீவிர விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது.