மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தற்கொலை செய்து கொண்ட13 வயது மாணவி... விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை.!
புதுச்சேரியில் குடும்ப பிரச்சினை காரணமாக தாய் தந்தை பிரிந்து வாழ்ந்ததால் விரக்தியில் இருந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள சோலை நகர் கல்லறை வீதி பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி(35). இவரது மனைவி புஷ்பா(32). இந்த தம்பதியினருக்கு மதன் (17), மனோஜ் (16) என இரண்டு மகன்களும், மதினா (14) என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் மதீனா அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக புஷ்பா மற்றும் மூர்த்தி பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் புஷ்பா தனது அக்கா வீட்டில் மூன்று குழந்தைகளையும் விட்டு விட்டு ஒரு வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் தனது மகளுடன் செல்போனில் பேசியிருக்கிறார். அப்போது தாய் தந்தை பிரிந்து வாழ்ந்து வருவதால் மதினா மிகவும் சோகத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாருமில்லாத போது விரக்தியிலிருந்த மதினா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.