மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ட்யூசன் எடுக்க சென்ற ஆசிரியை... +2 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை... டியூசன் ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது.!
கேரள மாநிலத்தில் மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த டியூஷன் ஆசிரியை கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சார்ந்த மாணவி அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி முடிந்து வெகு நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையை தீவிர விசாரணையில் இறங்கியது. காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் அந்த மாணவியும் அவரது டியூசன் ஆசிரியையும் எர்ணாகுளத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எர்ணாகுளம் சென்ற திருவனந்தபுரம் போலீசார் மாணவி மற்றும் டியூஷன் ஆசிரியை இருவரையும் திருவனந்தபுரம் அழைத்து வந்தனர்.
மாணவியிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது இதனைத் தொடர்ந்து டியூஷன் ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மாணவியிடம் நடத்திய விசாரணையில் டியூசன் எடுப்பதற்காக தினமும் மாணவியின் வீட்டிற்கு ஆசிரியை சென்று இருக்கிறார். அப்போது மாணவிக்கும் ஆசிரியருக்கும் இடையே தன் பாலின ஈர்ப்பு ஏற்பட்டு மாணவியின் விருப்பத்துடனே சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.