#Breaking: ஆப்ரிக்கா சென்று வந்த இந்தியருக்கு எம்.பாக்ஸ் உறுதி; மத்திய சுகாதாரத்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு.! 



union-health-ministry-confirms-first-mpox-virus-in-indi


சர்வதேச அளவில் கொரோனா வைரசுக்கு பின்னர், எம்பாக்ஸ் எனப்படும் வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து இருக்கிறது. குறிப்பாக ஆப்ரிக்க நாடுகளில் இருந்து எம்பாக்ஸ் வைரஸ் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சோதனை தீவிரம்

இதனால் ஆப்ரிக்கா சென்று வரும் மக்களை சோதனை செய்து வரும் நிலையில், இந்தியாவிலும் சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதனிடையே, கடந்த 7ம் தேதி ஆப்ரிக்கா சென்று வந்த நபர் ஒருவரிடம் இருந்து, எம்பாக்ஸ் வைரஸ் அறிகுறி தென்பட்டது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

எம்பாக்ஸ் உறுதி

இதனிடையே, அவருக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில், மேற்கு ஆப்ரிக்காவில் பரவிய எம்பாக்ஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: கை-கால்களை துண்டாக்கி, 17 வயது மகளை கண்டந்துண்டமாக வெட்டிக்கொன்ற தந்தை; அதிரவைக்கும் காரணம்.!

Clade 2 எனப்படும் எம் பாக்ஸ் வைரஸ் குறித்த நபருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்.பாக்சில் Clade 1 ரக வைரஸ் மட்டுமே ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதனால் அவருக்கு சாதாரண அளவிலான அம்மை தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காதலியை பார்க்க மாறுவேடத்தில் வந்து வசமாக சிக்கிக்கொண்ட காதலன்; நொறுக்கியெடுத்த பொதுமக்கள்.!