மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலியல் துன்புறுத்தலை எதிர்த்து போராடிய சிறுமியின் குடும்பத்தினர் மீது சரமாரி துப்பாக்கிசூடு; 10 பேரின் உயிர் ஊசல்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மஹோபா மாவட்டம், பெந்தோ கிராமத்தில் வசித்து வரும் நபர் ஜிதேந்திர திவாரி. இவர் அப்பகுதியில் வசித்து வரும் பி.ஏ பயின்று வரும் கல்லூரி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, தொல்லை செய்து வந்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவி, தனது குடும்பத்துடன் போராட்டம் செய்துள்ளார். இந்த தகவலை அறிந்த ஜிதேந்தர் திவாரி மற்றும் அவரின் தந்தை, துப்பாக்கியுடன் விரைந்து மாணவியின் குடும்பத்தை நோக்கி சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கிறார்.
இந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தை சேர்ந்த 7 பேர், பொதுமக்கள் 3 பேர் என 10 பேர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியிடமும் புகார் பெறப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் தலைமறிவாகியுள்ள நிலையில், அவர்களை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி குப்தா தெரிவித்தார்.