மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தைகளை பாதுகாக்கவே போக்ஸோ.. காதலிக்கும் இளைஞர்களுக்கு கிடையாது - நீதிபதி..!
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் குழந்தைகளை பாதுகாக்க போக்ஸோ உருவாக்கப்பட்டது, அது ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்ட இளைஞர்களுக்கு எதிரானது கிடையாது என அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தை சார்ந்த 14 வயது பட்டியலின சிறுமியும், உயர்ஜாதி வகுப்பை சேர்ந்த சிறுவனும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்து எதிர்ப்பு கிளம்பவே, வீட்டில் இருந்து வெளியேறிய காதல் ஜோடி கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளது. மேலும், கடந்த 2 வருடமாக தலைமறைவாக வாழ்ந்து குடித்தனம் நடத்தியதில், சிறார் காதல் ஜோடிக்கு குழந்தையும் பிறந்துள்ளது.
இந்நிலையில், காதல் ஜோடியில் ஆண் தற்போது இளைஞருக்கான வயதை அடைந்த நிலையில், சிறுமியை திருமணம் செய்ததாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞன் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்யவே, மனுவை விசாரணை செய்த நீதிபதி, "காதல் வயப்பட்டுள்ள சிறார்கள் போக்ஸோ சட்டத்தில் கைதாகி வருகிறார்கள்.
இந்த சட்டத்தின் உட்பொருளை அறியாமல், அதில் உள்ள தண்டனை பிரிவை வைத்து வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இது வருத்தத்தை அளிக்கின்றது. பாலியல் வன்கொடுமை, பாலியல் தொல்லை , ஆபாச படங்கள் காண்பிப்பது போன்ற குற்றத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவே போக்ஸோ கொண்டு வரப்பட்டது.
ஆனால், அறியா வயதில் காதல் செய்யும் சிறார்கள், இளைஞர்களுக்கு எதிராக பெற்றோர் கொடுக்கும் புகார் போக்ஸோவில் பதிவு செய்யப்படுகிறது. காதல் இயற்கையானது. அதனை சட்டத்திற்குள் கொண்டு வர வேண்டியது கிடையாது என்பதை போக்ஸோ சட்டமே தெளிவாக சொல்கிறது" என்று தெரிவித்தார். மேலும், இளைஞருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.