மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரே பெண்ணை நண்பர்கள் இருவர் காதலித்ததால் பயங்கரம்; துப்பாக்கி முனையில் காட்டுக்குள் கதறிய நண்பன்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, ரஹீமாபாத் பகுதியில் காட்டுப்பகுதிக்குள் இரவு 11 மணி அளவில் துப்பாக்கி சூடும் சத்தம் கேட்டது. அங்கு துவிவேதி என்பவர், தன்னை தனது நண்பர் தோள்பட்டையில் சுட்டதாகவும், தான் உயிருக்கு போராடி வருவதாகவும் பிற நண்பர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், துவிவேதி மற்றும் அவரது நண்பர் விகாஸ் குமார் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலித்து வந்த நிலையில், குமார் துவிவேதியிடம் பெண்ணை விட்டுக் கொடுக்கும்படி பேசியிருக்கிறார்.
ஆனால், துவிவேதி இதற்கு மறுப்பு தெரிவித்து, தொடர்ந்து பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் நண்பனை கொலை செய்ய திட்டமிட்ட விகாஸ் குமார், தனது நண்பர் மகேந்திரா என்பவரின் உதவியின் மூலமாக துப்பாக்கியை பெற்று இருக்கிறார்.
பின் சமாதானம் பேசுவதாக துவிவேதியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, சுட்டுக் கொலை செய்ய முயற்சித்து இருக்கிறார். நல்வாய்ப்பாக துவிவேதியன் தோள்பட்டையில் குண்டு பாய்ந்த நிலையில், அவர் துப்பாக்கி குண்டு காயத்துடன் உயிர்பிழைத்து, தற்போது மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை கொலை செய்ய முயற்சித்த நண்பரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.