மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மின்சார கோளாறு காரணமாக வீடு தீப்பிடித்து பயங்கரம்: 9 வயது சிறுமி, 6 மாத கைக்குழந்தை பரிதாப பலி.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் காசியாபாத் மாவட்டம், உள்ள பாகாதுர்கர்க் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வீட்டில், இன்று திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை அணைத்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, 6 மாதமான குழந்தை மற்றும் அவரின் 9 வயது சகோதரி ஆகியோரும் தீயில் எரிந்து கருகியது தெரியவந்தது.
இந்த அதிர்ச்சி காட்சிகளை கண்ட காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.