ஹனி ட்ராப்பில் சிக்கி இந்திய இராணுவ இரகசியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய இந்திய தூதரக ஊழியர்; அதிரடி கைது.!



Uttar Pradesh Habur Man Arrested Share Indian Army Document to ISI 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹபூர், ஷாமாஹியுதீன்பூர் பகுதியை சேர்ந்தவர் சதேந்திர சிவால். இவர் கடந்த 2021ம் ஆண்டு முதல் ரஷியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்துள்ளார். 

இந்நிலையில், சமீபத்தில் நாட்டிற்கு வந்த இவர், இந்திய விமானப்படையின் இராணுவ ரகசியங்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில், ஹனி டிராப் முறையில் பூஜா மெக்ரா என்ற கணக்கு கொண்ட பெண்ணால் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. 

அந்த பெண்ணுக்கு இராணுவ ரகசியங்களை பணத்திற்காக விற்பனை செய்த நிகழ்வும் அம்பலமாகி இருக்கிறது. கைது செய்யப்பட்ட சதேந்திரன் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. 

சிவால் நாட்டின் இராணுவ ரகசியங்களை பணத்திற்காக விற்பனை செய்த தகவலை அறிந்த குடும்பத்தினர், தங்களின் வீடுகளில் இருந்து வெளியேறி வேறொரு இடத்திற்கு குடிபெயர்ந்து இருப்பதாக உள்ளூர் காவலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.  

ஹனி ட்ராப் முறை என்பது ஒரு தனிநபரின் ஆசையை தூண்டும் விதமாக செயல்பட்டு, சல்லாப வலையில் விழவைத்து தனக்கு தேவையான காரியத்தை எதிராளிகள் பெற்றுக்கொள்ளும் முறையாகும்.