பயணிகள், அதிகாரிகள் கண்முன் உடல் துண்டு துண்டாகி உயிரிழந்த பெண்மணி: இரயில் முன் பாய்ந்த பதைபதைப்பு வீடியோ வைரல்.!



Uttar Pradesh Hapur women Suicide Railway Station 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹபூர் இரயில் நிலையத்திற்கு நேற்று வந்த பெண்மணி, திடீரென நடைமேடையை கடந்து அவ்வழியே வந்த இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். 

இரயில் நடைமேடையில் நிற்பதற்காக மெதுவாக வந்தாலும், இரயில் நிலையத்தின் நடுப்பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. 

பெண்மணி இரயில் வருவதை நன்கு கவனித்து, தன்னை யாரும் காப்பாற்ற இயலாத சூழ்நிலையை உருவாக்கி தனது விபரீத எண்ணத்தை அவர் அரங்கேற்றினார். 

பயணிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் கண்முன்னே பெண்மணி இரயில் சக்கரத்தில் சிக்கி, புரட்டியெடுக்கப்பட்டு உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், உயிரிழந்த பெண்மணி யார்? எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.