மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசின் அனுமதிபெற்ற சரக்கை குடித்த 6 பேர் அடுத்தடுத்து மரணம்.. 8 அதிகாரிகள் சஸ்பெண்ட்.!
விசேஷ நிகழ்ச்சியில் மதுபானம் அருந்திய 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், பலரும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி மாவட்டத்தில் உள்ள பாஹர்பூர் கிராமத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக்கடையில் மதுபானம் வாங்கி அருந்திய 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், பலரும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை அங்கு ஏற்படவே, 5 காவல் துறையினர் மற்றும் 3 கலால்துறை அதிகாரிகள் என மொத்தமாக 8 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விசேஷ நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் மதுபானம் அருந்திய நிலையில், அவர்களின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் அருந்திய மதுபானத்தை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் ஆய்வக முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.