மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாணவிக்கு மெசேஜ் அனுப்புவதில் தகராறு; பள்ளி மாணவர்கள் மீது துப்பாக்கிசூடு.. இருவர் காயம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாக்பாத் மாவட்டம், பகவத் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இரண்டு கும்பல் இடையே நடந்த சண்டை காரணமாக இரண்டு மாணவர்கள் காயமடைந்து இருக்கின்றனர். இவர்கள் இருவரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு இருக்கின்றனர்.
பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு இடையே, அதே பள்ளியில் படிக்கும் சிறுமிக்கு தொடர்பு கொள்வது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது இரண்டு கும்பலுக்கு இடையே சண்டையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவத்தில் உச்சகட்டமாக துப்பாக்கிசூடும் நடைபெற்றதை தொடர்ந்து, காவல் துறையினர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்த இரண்டு மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளுக்கு வலைவீசப்பட்டுள்ளது.