கருவை கலைக்க அனுமதி கேட்டு நீதிபதி முன் விஷம் குடித்த இளம்பெண்: பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு நடந்த சோகம்.!



Uttar Pradesh Women Suicide Attempt in Front Of Judges want to Permit Abortion Baby 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள படாவுன் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும், உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்கே பகுதியை சேர்ந்தவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து, அவ்வப்போது தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், திருமண வாக்குறுதி அளித்த இளைஞர், பெண்ணிடம் விருப்பத்துடன் நெருங்கி இருக்கிறார். 

ஆனால், காலப்போக்கில் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த இளைஞர், அவரிடம் இருந்து விலக முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது. இதனிடையே, பெண்மணி கர்ப்பமாகி இருக்கிறார். 

இதனை சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இவ்வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தனது 4 மாத கருவை கலைக்க அனுமதிகேட்டு பெண்மணி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். 

இந்த மனு விசாரணையின்போதே, பெண் நீதிபதிகள் முன்பு திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் பதறிப்போன நீதிபதிகள், உடனடியாக நீதிமன்ற பணியாளர்களின் உதவியுடன் பெண்ணை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இளைஞரின் உறவினர்களான செல்வந்தர்கள், பெண்ணை புகாரை வாபஸ் பெறக்கூறி மிரட்டி வந்ததும் தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட மனஅழுத்ததில் அவர் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.