மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாய் பெஸ்ட்டியுடன் உறவை விடாத சிறுமி, காதலனால் விபரீதம்.. இரும்பு பெட்டியில் பிணத்துடன் அலைந்த இளைஞர்.!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள படோஹி பகுதியில் இருக்கும் ஒரு காட்டுக்குள் இரும்பு பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அதில் கிடந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் பிணமாக கிடந்த சிறுமைக்கு 16 வயது என்றும், அந்த சிறுமி உபேந்திரா என்ற இளைஞரை காதலித்து வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. சமீபத்தில் சிறுமிக்கு வேறொரு சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதை சந்தேக கண் கொண்டு பார்த்த இளைஞர் உபேந்திரா கண்டித்து இருக்கிறார். ஆனால் சிறுமி அந்த நபருடன் பழக்கத்தை கைவிடவில்லை.
எனவே ஆத்திரம் தாங்காத உபேந்திரா அந்த பெண்ணுடன் சண்டையிட்டு அவரை கழுத்தை நெறித்து கொலை செய்து இருக்கிறார். பின் ஒரு இரும்பு பெட்டியில் பிணத்தை எடுத்து அடைத்து தனது பைக்கில் வைத்துக் கொண்டு சென்று காட்டுப் பகுதியில் வீசி இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, போலீசார் உபேந்திராவை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.