மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலித்து கரம்பிடிக்க மறுத்த காதலன்; காதலனை மிரட்ட நினைத்து, 22 வயது இளம்பெண் பரிதாப பலி.!
திருமணத்திற்கு காதலனை கரம்பிடிக்க வற்புறுத்த வேண்டிய பெண்மணி எடுத்த விபரீத செயல்திட்டம், அவருக்கே எதிரான சோகம் நடந்துள்ளது.
உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் பகுதியை சேர்ந்தவர் வினிதா பண்டாரி (வயது 22). கடந்த டிசம்பர் 04ம் தேதி மார்க்கெட்டுக்கு சென்ற பெண்மணி, மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
இந்த விஷயம் தொடர்பாக பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர். இதனிடையே, நேற்று பெண்ணின் சடலம் ஒன்று, பாதி எரிந்த நிலையில் டெஹ்ராடூன் சாலையில் உள்ள வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
உயிரிழந்த பெண் யார்? என அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அது மாயமான வினிதா என்பது உறுதியானது. இதன்பின் அவரை கொலை செய்தது யார்? என்று விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
விசாரணையில், வினிதாவும் - அர்ஜுன் ராவத் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, அர்ஜுன் ராவத் இளம்பெண்ணை கைவிட்டு செல்ல நினைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்துபோன வினிதா, காதலரிடம் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார். கடந்த டிசம்பர் 4ம் தேதி இருவரும் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது, காதலனை எப்படியேனும் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என வினிதா முடிவுடன் இருந்துள்ளார்.
காதலரை மிரட்டுவதற்காக வனப்பகுதியில் வினிதா தனது உடலில் பெட்ரோல் ஊற்றி, திருமணம் செய்யவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டி இருக்கிறார். ஒருகட்டத்தில் உடலில் தீவைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பெண்ணின் உடல் எரிந்த பின்னர் காதலன் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகி இருக்கிறார். விசாரணைக்கு பின்னர் அதிகாரிகள் அர்ஜுன் ராவத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.