#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கிணற்றில் விழுந்த ஆடை மீட்கச் சென்றவர் பரிதாப பலி; கயிறு அறுந்துபோனதால் துயரம்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, ஆமணக்கு நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் முருகன் (வயது 52). இவர் சொந்தமாக ஆடு வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரின் ஆடு ஒன்று, சந்தையூர் கருப்பசாமி கோவில் பின்புறம் இருக்கும் கிணற்றில் தவறி விழுந்து இருக்கிறது.
தவறி விழுந்து உயிரிழப்பு
இதனைக்கண்ட முருகன் கிணற்றில் தவித்த ஆட்டை மீட்க கயிறுகட்டி கிணற்றுக்குள் இறங்கி இருக்கிறார். அப்போது திடீரென கயிறு அறுந்து விழுந்து முருகன் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனால் அவர் காயமடைந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: கைக்குழந்தை வைத்துள்ள பெற்றோர்களே உஷார்.. பந்தை விழுங்கி 8 மாத குழந்தை பலி., திருவள்ளூரில் சோகம்.!
தகவல் அறிந்து வந்த பந்தல்குடி காவல்துறையினர், முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விஷயம் தொடர்பாக முருகனின் மனைவி இளஞ்சியம் அளித்த புகாரின் பேரில், அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குளத்தில் நண்பர்களுடன் உற்சாக குளியல்; அக்கரைக்கு நீந்த ஆசைப்பட்டு இளைஞர் பரிதாப பலி.!