#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கைக்குழந்தை வைத்துள்ள பெற்றோர்களே உஷார்.. பந்தை விழுங்கி 8 மாத குழந்தை பலி., திருவள்ளூரில் சோகம்.!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு, அரங்கம்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் அஜித் குமார். இவர் மீனவராக இருந்து வருகிறார். அஜித்துக்கு திருமணம் முடிந்து மனைவி, 8 மாதமேயான சர்வேஷ் என்ற கைக்குழந்தை இருக்கிறது.
இந்நிலையில், குழந்தை வீட்டில் சிறிய அளவிலான பந்தை வைத்து விளையாடி இருக்கிறது. அச்சமயம் எதிர்பாராத விதமாக அதனை விழுங்கிவிடவே, மூச்சுத்திணறலால் குழந்தை அவதிப்பட்டுள்ளது.
மூச்சுத்திணறி பரிதாப பலி
குழந்தையை மீட்ட குடும்பத்தினர் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு மருத்துவர்கள் பந்தை எடுக்க முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: குளத்தில் நண்பர்களுடன் உற்சாக குளியல்; அக்கரைக்கு நீந்த ஆசைப்பட்டு இளைஞர் பரிதாப பலி.!
இதனால் தொடர்ந்து சுவாசம் அளித்து மேல் சிகிச்சைக்கு அனுப்பலாம் என முயற்சிகள் மேற்கொண்டபோது, குழந்தை மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பெற்றோர்-குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் சோகம்; 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி.! தூத்துக்குடியில் பரிதாபம்.!