#ShockingNews: ஓடும் காரில் இளம்பெண் பலாத்கார முயற்சி.. கீழே குதித்து தப்பிய பெண்மணி.. பதைபதைப்பு சம்பவம்.. உறவினர் வெறிச்செயல்.!



West Bengal Darjeeling 31 aged Asha Worker Sexual Assaults Escape Jump of Running Car

சுகாதாரத்துறை ஆர்வலர் உறவினரால் ஓடும் காரில் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் இருந்து குதித்து உயிர்தப்பிய பெண்ணின் பதைபதைப்பு சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டம், குர்ஷிஸோங் நகரில் 31 வயது பெண்மணி சுகாதாரத்துறை ஆர்வலராக (ASHA) பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்துள்ளார். 

அப்போது, பெண்ணுக்கு தெரிந்த உறவினர் ஆயுஷ் தாபா என்பவர், நானும் வீட்டிற்கு தான் செல்கிறேன் வாருங்கள் காரில் ஒன்றாக செல்லலாம் என்று தெரிவித்துள்ளார். உறவினர் என்பதால் பெண்ணும் நம்பி காரில் பயணம் செய்த நிலையில், காமுகன் பெண்ணை ஓடும் காரில் பலவந்தமாக பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான். 

west bengal

இதனால் பதறிப்போன பெண்மணி மகைபாரி சாலை அருகே காரின் கதவை திறந்து வெளியே குதித்து தப்பி இருக்கிறார். மயக்க நிலையில் உயிருக்கு போராடிய பெண்ணை மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், மருத்துவமனைக்கு சென்று பெண்ணிடம் விசாரணை செய்தனர். 

அந்த சமயத்தில் அவர் பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க ஓடும் காரில் இருந்து குதித்த பதைபதைப்பு நிகழ்வை விவரிக்க, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இரவோடு இரவாக ஆயுஷ் தாபாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.