மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இடி-மின்னல், சூரைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த திடீர் மழை; மாநில அளவில் 12 பேர் பலி.!
மேற்குவங்கம் மாநிலத்தில் நேற்று முன்தினம் திடீரென இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. பலத்த காற்றும் வீசிய காரணத்தால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
திடீர் மழையால் மரணங்கள்:
மழைக்கு முன்னதாக அம்மாநிலம் முழுவதும் பரவலான வெப்ப அலை மக்களை கடும் அவஸ்தைக்குள்ளாக்கியது. 47 டிகிரி வெப்பநிலை பதிவானது. அதனைத்தொடர்ந்து, திடீரென பெய்த மழையில் சிக்கி மின்சாரம் தாக்கி ஒரேநாளில் மாநில அளவில் 9 பேர் உயிரிழந்தனர்.
மம்தா பேனர்ஜி இரங்கல்:
மேலும், மரங்கள் விழுந்ததில் 3 பேர் என மொத்தமாக 12 பேர் பலியாகினர். இதனால் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.