மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடியரசு நாளை சிறப்பாக கொண்டாட என்ன கரணம் தெரியுமா? அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு!
நாடு முழுவதும் நாளை ௭௦ வது குடியரசுதினம் கொண்டாடப்பட்ட உள்ளது. நாடு முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இவளோ பாதுகாப்புக்கு இடையே நாம் ஏன் குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடுகிறோம் தெரியுமா?
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்வதற்கு முன்பு, மன்னர்கள் ஆட்சியில்தான் இந்தியா இருந்தது. நாடு முழுவதும் ஒற்றுமை இல்லாமல், மன்னர்கள் காட்டும் வழியின்கீழ் மக்கள் வாழ்ந்துவந்தார்கள். ஒரு மன்னன் இறந்தபிறகு அவரது வாரிசுகள் அரியணை ஏறினார். எனவே மக்களை யார் ஆட்சி செய்யவேண்டும் என்ற பொறுப்பு மன்னர்களிடம் மட்டுமே இருந்தது.
இந்தியா சுதந்திரம் வாங்கிய பிறகு, மக்களை யார் ஆட்சி செய்யவேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். அதுதான் உண்மையான குடியரசு என பல அறிஞர்கள் ஓன்று சேர்ந்து அதற்கான வழிமுறைகளை நிர்ணயித்தனர். அவர்கள் நிர்ணயித்த வழிமுறைகளை ஏற்றுக்கொண்ட நாள் ஜனவரி 26 , 1950 . இந்த நாளைத்தான் நாம் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம்.
இந்திய சுதந்திரம் அடைந்த நாளை விட, குடியரசான நாளைத்தான் நாம் அதிகம் கொண்டாட வேண்டும். ஏன் தெரியுமா? மக்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கும் அதிகாரத்தை, மக்களுக்கு வழங்கியது இந்த குடியரசு நாள் தான்.