மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவி வெட்டி கொலை; கணவன் செய்த பயங்கர செயல்.. திருச்சூர் அருகே பரபரப்பு..!
திருச்சூர் அருகே இளம்பெண்ணை வெட்டிக் கொன்ற கணவன்.
இதுதொடர்பாக காவல் துறையினர் அந்தப் பெண்ணின் கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர். பாலக்காடு, திருச்சூர் அருகே இருக்கும் மாள மங்களத்து பகுதியில் வசித்து வருபவர் முகமது ஆசிப் (31). இவரது மனைவி ஆஷிதா (25). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் பிரசவத்திற்காக அவரின் தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார். அங்கு கடந்த 16 நாட்களுக்கு முன்பு அஆஷிதாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
மாமியார் வீட்டில் இருந்த மனைவியையும் குழந்தையையும் 16 நாட்கள் ஆகியும் முகம்மது ஆசிப் பார்க்க வரவில்லை. நேற்று மாலை ஐந்து மணி அளவில் மனைவியை மற்றும் குழந்தையை பார்ப்பதற்கு முகமது ஆசிப் மாமனார் வீட்டுக்கு வந்தார். அங்கு குழந்தையை பார்த்துவிட்டு மனைவியுடன் பேசினார். சிறிது நேரத்தில் அங்கு இருந்த அரிவாளை எடுத்து திடீரென மனைவியை சரமாரியாக வெட்டிவிட்டு முகமது ஆசிப் தப்பி ஓடி விட்டார். மகளின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்தனர்.
அங்கு மகள் ஆஷிதா வெட்டு பட்டு படுகாயம் அடைந்த நிலையில் கீழே கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருச்சூரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆஷிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்சூர் காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை செய்தனர். மேலும், தப்பிஓடிய முகமது ஆசிப்பை தீவிரமாக தேடி வருகின்றனர். பெண் குழந்தை பிறந்த 16-வது நாளில் தாய் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.