மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஸ்லோ பாய்சன்... பக்காவா ப்ளான் போட்டு கள்ளக்காதலனுடன் கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி!! வெளிச்சத்திற்கு வந்த ஷாக் உண்மைகள்!!
மும்பை சாந்தாகுரூஸ் மேற்கு பகுதியில் வசித்து வந்தவர் 45 வயது நிறைந்த கமல்காந்த் ஷா. இவரது மனைவி கவிதா. திருமணமாகி 20 ஆண்டுகள் நிறைந்த இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்த நிலையில் கமல்காந்திற்கு திடீரென பயங்கரமான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் அந்தேரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் அவருக்கு வலி குறையாத நிலையில் அவர் பாம்பே மருத்துவமனையில் மேற்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு நடந்த சோதனையில் அவரது இரத்தத்தில் ஆர்சனிக் மற்றும் தாலியம் பெருமளவில் கலந்திருப்பது தெரியவந்தது. இதற்கிடையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கமல்காந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் கமல்காந்தின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகமடைந்த போலீசார் இதுகுறித்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் அவரது மனைவி கவிதா குறித்து பல ஷாக் உண்மைகள் வெளிவந்தது. அதாவது கவிதாவிற்கு, ஹிதேஷ் ஜெயின் என்பவருடன் தொடர்பு இருந்துள்ளது.
இந்த நிலையில் தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தீர்த்துகட்டிவிட்டு அவரது சொத்துக்களை அபகரிக்க திட்டம் போட்ட கவிதா ஆர்சனிக் மற்றும் தாலியம் ரசாயனத்தை சாப்பாட்டில் கலந்து கொடுத்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்த கமல்காந்த் உடல்நிலை மிகவும் மோசமாகி அவர் உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கவிதா மற்றும் அவரது காதலன் ஹித்தேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.