கள்ளகாதலனுக்காக கணவனை கொன்ற கொடூர மனைவி!. விசாரணையில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!.



wife-killed-husband-by-illegal-relationship-XG6DJP

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சாகத் இவர் மீன் வியாபாரம் செய்துவந்துள்ளார். இவருக்கு சவுஜத் என்ற மனைவியும், 4 வயதில் குழந்தையும் உள்ளனர்.

சாகத்தின் மனைவி சவுஜத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த பஷீர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது  நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதனையடுத்து இருவரும் பல இடங்களுக்கு சுற்றித் திரிந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பஷீர் வேலை விஷயமாக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். ஆனாலும் இருவரும் போனில் தங்களது கள்ள காதலை அரங்கேற்றியுள்ளனர்.

கள்ளகாதலின் உச்சத்தால் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். ஆனால் இதற்கு சவுஜத்தின் கணவர் தடையாக இருப்பதால் அவரை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளனர்.

இதனால், பஷீர் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் கண்ணூர் வந்தார். கண்ணூர் விமான நிலையத்தில் அவரது நண்பர் காருடன் காத்திருந்தார்.

பின்னர் இருவரும் சம்பவத்தன்று இரவு சவுஜத்தின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு சவுஜத் கதவை திறந்த நிலையிலே வைத்துள்ளார். உடனடியாக வீட்டிற்குள் புகுந்த பஷீர் தூங்கிக் கொண்டிருந்த சாகத்தின் தலையில் தாக்கியுள்ளார். சாகத் இறந்துவிட்டதாக நம்பி பஷீர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

ஆனால் சாகத் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அதை அறிந்த சவுஜத், இன்னும் உயிர் பிரியவில்லையே என்ற ஆத்திரத்துடன் மீன் வெட்டும் அரிவாளை எடுத்து கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இந்த நிலையில் மர்மநபர்கள் கணவனை கொலை செய்துவிட்டதாக கூறி சவுஜத் கதறி அழுதுள்ளார். தகவலறிந்த போலீசார் சவுஜத்திடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவர் முன்னுக்கு, பின்னாக பதில் கூறியதால், போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் கெடுபிடி விசாரணையில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். கள்ளக்காதலனுடன்  சேர்ந்து வாழ கணவர் இடையூறாக உள்ளதாக நினைத்து வெளிநாட்டில் இருந்த கள்ளக்காதலனை வரவழைத்து கொலை செய்தோம். இதற்கு பஷீரின் நண்பரும் உடந்தையாக இருந்ததாக கூறினார்.

இதனையடுத்து சவுஜத் மற்றும் கொலைக்கு உதவிய பஷீரின் நண்பரை கைது  செய்தனர்.  முக்கிய குற்றவாளி பஷீரை போலீசார் தேடி வருகின்றனர்.