கழுதைப்புலியை அடித்துக் கொன்று கணவனை காப்பாற்றிய வீரப் பெண்மணி.. குவியும் பாராட்டு!



wife-saved-husband-against-donkey-tiger

சத்தீஸ்கர் மாநிலத்தில் கழுதை புலியிடம் சிக்கிய கணவரை மனைவி காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள இங்க்ரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் நந்து ராம் யாதவ். இவரது மனைவி சுக்னி. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர்கள் தங்களது விவசாய நிலத்தில் சோளத்தை பயிரிட்டுள்ளனர்.

Donkey tiger

இந்த நிலையில் நந்து ராம் யாதவ் தனது வயலுக்கு உரம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த கழுதைப்புலி அவரை தாக்கியுள்ளது. இதில் நிலைகுலைந்த நந்து கீழே விழுந்து கத்தியுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மனைவி சுக்னி, தனது கணவரை கழுதைப்புலி தாக்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உடனடியாக மூங்கில் தடி ஒன்றை எடுத்து கழுதை புலியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

Donkey tiger

இந்த தாக்குதலில் கழுதைப்புலி பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்தது. இதனையடுத்து கணவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.