#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழகத்தில் பயங்கரம்... 3 நாட்கள் கற்பழிப்பு,! கூலி தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்.!! .!
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தலித் பெண் 4 நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு சாதிய வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக 4 நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
கூலி வேலைக்குச் சென்ற பெண்
ஈரோடு மாவட்டம் மைக்கேல்பாளையம் அருகே உள்ள ஓடைமேடு பகுதியைச் சேர்ந்த பட்டியலின பெண் தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். வேலைக்குச் செல்லும் போது இந்தப் பெண்ணிற்கு மூலகல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த நபர் கொடுக்கும் தகவல்களின் மூலம் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.
கடத்திச் சென்று கூட்டு கற்பழிப்பு மற்றும் வன்கொடுமை
இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி இரவு தன்னை சந்திக்க வருமாறு அந்த நபர் அழைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற நபர் ஈரோடு அருகே உள்ள தோட்டத்து வீட்டில் அடைத்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த நபரின் நண்பர்கள் 3 பேரும் அந்த வீட்டிற்கு வந்திருக்கின்றனர். மேலும் இவர்கள் 4 பேரும் சேர்ந்து 2 நாட்களாக அந்த பெண்ணை கற்பழித்ததோடு அவரது ஜாதிப் பெயரைச் சொல்லி கடுமையாக வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் குழந்தைகளை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: ரௌடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம்; காவல் ஆணையர் அருண் மன்னிப்பு கோரினார்.!
எஸ்பி அலுவலகத்தில் புகார்
இதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து தப்பித்து வந்த பெண் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து கணவரிடம் தெரிவித்து இருக்கிறார். இதன் பிறகு அந்தப் பெண் மற்றும் அவரது கணவர் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகாரளித்தனர். மேலும் அந்தப் புகாரில் தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு சாதி ரீதியாக தவறான வார்த்தைகளை பயன்படுத்தி வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் ஈரோடு பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #Breaking: திருவள்ளூரில் இரயிலை கவிழ்க்க திட்டமிட்ட சதி? அம்பலமாகப்போகும் அதிர்ச்சி உண்மை... விபரம் உள்ளே.!