மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பகலில் ஆண், இரவில் பெண்.! இளைஞனின் வலையில் சிக்கிய 70 பெண்கள்.! அதிர்ச்சி பின்னணி.!
விஜயவாடாவை சேர்ந்தவர் சுமன். இவர் ஹைதராபாத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பகல் முழுவதும் கம்பெனியில் வேலை பார்த்து வரும் சுமன், இரவு நேரம் ஆகிவிட்டால், பெண்ணாக தன்னை மாற்றி கொண்டு சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களுக்கு வலை வீசி வந்துள்ளார்.
இதனால் இந்த 2 வருடத்தில் மட்டும் சுமனிடம் 70 பெண்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். பெண் பெயரில் பேர் உள்ளதாலும், பெண் போட்டோவை வைத்திருந்ததாலும், இளம் பெண்கள் சிலர் தானாகவே முன்வந்து இவரிடம் நட்பு கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு கிடைத்த இந்த 70 பெண்களிடமும் ஆரம்பத்தில் சகஜமாகவே பேசி வந்தார்.
இதனையடுத்து அவர்களிடம் தனிப்பட்ட முறையிலும் பேச்சை தொடங்கி உள்ளார். அதன் பின் அவர்களின் புகைப்படங்களை தனக்கு அனுப்பும் படி உரிமையுடன் கேட்க துவங்கியுள்ளார். இதனால் இவர் ஆண் என்பதை அறியாமல் அந்த பெண்களும் சகஜமாக பேசி வந்ததால், நாட்கள் ஆக, ஆக, இவர் தன்னுடைய அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை அந்த பெண்களுக்கு அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
மேலும் , தான் சொல்வதை கேட்கவில்லையென்றால், உங்களின் புகைப்படங்களை எல்லாம் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்டு விடுவேன் என்றும் அந்த பெண்களை மிரட்டியுள்ளார். ஒருகட்டத்தில் சுமனின் தொல்லை தாங்க முடியாமல், ஒரு பெண் ஹைதராபாத் சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, இவரால் 70 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இகனையடுத்து சுமனை கைது செய்த பொலிசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.