பட்டப்பகலில் என்ஜினீயரிங் மாணவியை கத்தியால் குத்தி கொல்லும் இளைஞன்.! சிசிடிவி கேமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி.!



young boy murdered engineering student

ஆந்திர மாநிலம் குண்டூர் பரமைய்ய குண்டா பகுதியை சேர்ந்த ரம்யா என்ற 21 வயது நிரம்பிய இளம்பெண்  தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். ரம்யாவுக்கு குண்டூர் அடுத்த முட்லூர் பகுதியை சேர்ந்த சசி கிருஷ்ணா இன்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமாகியுள்ளார்.

இந்தநிலையில் இருவரும் தினமும் செல்போனில் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. சசி கிருஷ்ணாவுக்கு தாய், தந்தை இல்லாததால் சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். சசி கிருஷ்ணா திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது ரம்யாவுக்கு தெரியவந்தது. ஒருகட்டத்தில் திருட்டில் ஈடுபடாதே என்று கூறி ரம்யா, சசி கிருஷ்ணாவுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று ரம்யா அருகில் உள்ள ஓட்டலில் உணவு வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு பைக்கில் வந்த சசி கிருஷ்ணா, தனது இருசக்கர வாகனத்தில் ஏறும் படி கூறுகிறார். அதற்கு இந்த பெண் மறுக்கவே, உடனே அவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், கண்மூடித்தனமாக கழுத்து, வயிற்றுப் பகுதியில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த ரம்யாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சி பதிவுகளின் அடிப்படையில் அந்த இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.