ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
ஷாக்கிங்... ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு.!! தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.!!
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது வாலிபர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அந்த இளைஞரை தீக்காயத்துடன் மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கோட்டக்கரை என்ற இடத்தில் உள்ள நேதாஜி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட ஒரு வீட்டை இடிக்க முயன்றனர்.
திடீரென தீக்குளித்த இளைஞர்
அப்போது அதிகாரிகள் வீட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தஇளைஞர் ஒருவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பற்றி எரிந்த தீ அவரது உடல் முழுவதும் வேகமாக பரவியது. இதனைக் கண்ட அதிகாரிகளும் அக்கம் பக்கத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: மீளா துயரம் ... ஆசையாக வளர்த்த மகள் செய்த துரோகம்.!! தந்தையின் பரிதாப முடிவு.!
காப்பாற்றிய காவல் துறையினர்
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த காவல்துறையினர் இளைஞரின் உடல் முழுவதும் பற்றி எரிந்த தீயை அனைத்து இளைஞரை காப்பாற்றினார். உடனடியாக இளைஞரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: திருப்பூரில் பயங்கரம்... சிறுமியை ஆபாச வீடியோ எடுத்த காதலன்.!! நண்பனின் மூலம் ஸ்கெட்ச் போட்ட தந்தை.!!