35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
சென்னையில் அபிராமிக்கு அடுத்து அம்பலமான ஒரு விசித்திரமான கள்ளக்காதல்!!
காதல் விவகாரங்களால் தான் முன்னெல்லாம் பிரச்சனைகள் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். "இவன் மகள அவன் கூட்டிட்டு ஓடிட்டான், அவன் மகனை இவ கூட்டிட்டு ஓடிட்டா" என்று ஊரில் பேசுவதை கேட்டிருப்போம்.
ஆனால் இப்பொது நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் வித்தியாசமாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. சில சம்பவங்கள் குன்றத்தூர் அபிராமி சம்பவம் போல் வேதனை தருவதாகவும் இருந்து விடுகின்றது. சமீபகாலமாக இதை போன்ற கள்ளகாதலால் ஏற்படும் கோர சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன.
இந்த கள்ளக்காதல் விவகாரத்தால் பலருடைய குடும்ப நிலைமை கேள்விக்குயாகி உள்ளது. சென்னையில் கள்ளகாதலுக்காக தன் குழந்தைகளையே கொன்ற அபிராமி கதையே இன்னும் ஓயவில்லை. அதுக்குள்ளே சென்னையில் இன்னொரு கள்ளக்காதல் விவகாரம் காவல் நிலையம் வரை சென்றுவிட்டது.
ஒவ்வொரு கள்ளக்காதலுக்கு ஒரு பின்ணணி இருக்கும். இந்த கள்ளக்காதல் தன் தோழியின் சகோதரர் மூலமாக அரங்கேற இருக்கிறது.
அண்ணாநகர் கிழக்கு, 'எல்' பிளாக்கைச் சேர்ந்தவர், ஞானசூரியன், வயது 42. ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி உமாதேவி, இவருக்கு வயது 41.
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். உமாதேவிக்கு தனலட்சுமி என்ற தோழி இருக்கிறார். தனலட்சுமியின் சகோதரர் பெயர் மணிகண்டன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
தன் தோழியின் மூலம் அறிமுகமான மணிகண்டனுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்துவிட்டார் உமாதேவி. உமாதேவியின் வீட்டுக்கு மணிகண்டன் அடிக்கடி வருவதும், போவதும் என்று கள்ளக்காதல் தொடங்கியது. சில நாட்களுக்கு பிறகு இந்த விவகாரம் உமாதேவியின் கணவர் ஞானசூரியனுக்கு தெரியவந்துள்ளது.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தன் கணவர் வீட்டில் இருக்கும்போதே மணிகண்டனுடன் உமாதேவி கள்ள உறவில் ஈடுபட்டது தான். அதெப்படி நடந்தது என்று விசாரித்து பார்க்கும் போது தான் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் பற்றி உமாதேவியின் கணவர் கூறுகையில், தனக்கு தன் மனைவி தினமும் இரவில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்துவிட்டதும், தான் தூங்கிய பிறகு மணிகண்டனை வீட்டுக்கு வரவழைத்து இருந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனால் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த ஞானசூரியன் அண்ணாநகர் போலீசில் இதுகுறித்து புகார் செய்ததுடன், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத் புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மணிகண்டனை அதிரடியாக கைது செய்தனர்.