மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தினமும் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் என்ன நன்மை கிடைக்கும் தெரியுமா.?
வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்த கேரட்டை நாம் தினமும் உட்கொள்ளும் போது உடலுக்கு பல விதமான நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் அதிகளவு கேரட் சாப்பிடுவது கண் பார்வை திறனுக்கு சிறந்தது என பலர் சொல்லி கேள்வி பட்டிருப்போம். அத்தகைய கேரட்டை தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி இங்கு காண்போம்.
1. தினமும் கேரட் ஜூஸை குடிக்கும் போது, சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவாகவும், இளமையாகவும் இருக்கும்.
2. வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்த கேரட்டை நாம் தினமும் உட்கொள்ளும் போது பார்வை தெளிவாக தெரியவும், கண்கள் ஆரோக்கியமாக இருக்கவும் கேரட் பெரிதும் உதவி புரிகிறது.
3. தினமும் ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் குடிப்பதால் ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்பட்டு மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் உதவுகிறது. எனவே அடிக்கடி வயிறு சம்பந்தமான பிரச்சினையை சந்திப்பவர்கள் தினமும் கேரட் ஜுஸை பருகுவது நல்லது.
4. கேரட்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் பி6, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க கேரட் ஜுஸ் பெரிய பங்கு வகிக்கிறது.