முளைகட்டிய தானியங்களால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள்...!! தினமும் இப்படி சாப்பிடலாம்...!!



Benefits of sprouted grains in our body... You can eat like this everyday...

முளைகட்டிய தானியங்கள் சாப்பிடுவதால் நம் ஆரோக்கியம் மேம்படும்.

இது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை மிக அதிக அளவு கொடுக்கக்கூடிய ஒரு உணவாகும். ஆரோக்கிய உணவான முளைகட்டிய தானியங்களை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இருந்த போதிலும் இவற்றை தனியாக சாப்பிடுவதை விட சாப்பாட்டுடன் சரிவிகிதமாக கலந்து எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

மேலும் முளைகட்டிய தானியங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல. ஏதேனும் ஒருவேளை உணவுடன் சேர்த்து உண்ண வேண்டும்.

முளைகட்டிய தானியங்களில் உள்ள பயன்கள்;

பச்சை பயிறு;
பச்சை பயிரை முளைகட்டி சாப்பிடுவதால், நினைவாற்றல் அதிகரிக்கும். மறதி நோய் குறையும். தோல் பளபளப்பாகும்.

கொள்ளு பயிறு;
முளைகட்டிய கொள்ளு சாப்பிடுவதால் உடலில் இருக்கும் வெப்பம் தணியும், உடல் பருமனை குறைக்கும்.

கம்பு;
முளைகட்டிய கம்பு சாப்பிடுவதால், உடலுக்கு சக்தி கிடைக்கும். மேலும் ஊட்டச்சத்து குறைபாடுகளை முளைகட்டிய கம்பு சரி செய்கிறது.

வெந்தயம்;
வெந்தயத்தை முளைகட்டி சாப்பிடுவதால், பெண்களுடைய கர்ப்பப்பை தொடர்பான நோய்கள் மற்றும் வெள்ளைப்படுதல் போன்றவற்றை சரி செய்யும். சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.

உளுந்து பயிறு;
முளைகட்டிய உளுந்தில் புரதம், பொட்டாசியம், நியாசின், கால்சியம், இரும்பு, ரிபோஃப்ளோவின்,நியாசின் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற ஊட்டகத்துக்கள் முழுமையாக முளைகட்டிய உளுந்து பயிரில் கிடைக்கும். ஆனால் இதை செரிமான பிரச்சனை மற்றும் நெஞ்சு எரிச்சல் உள்ளவர்கள், வயதானவர்கள் பச்சையாக சாப்பிடாமல், வேக வைத்து சாப்பிட வேண்டும். வெறும் வயிற்றில் இதை சாப்பிடக்கூடாது.