வேலைக்கு சென்ற மகன் மரணம்.. செய்தி வந்த அடித்த நொடியே தாய் மாரடைப்பில் பலி.!



in Tiruvanamalai Mother Son Died 

மகனின் இறப்பு செய்தியை அறிந்த தாய் மாரடைப்பால் உயிரிழந்தார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், காரப்பட்டு, கொல்லக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் சாந்தி (வயது 60). இவரின் மகன் சின்னமணி (வயது 34). 

கூலித் தொழிலாளியான சின்னமணிக்கு, புவனா (வயது 30) என்ற மனைவி இருக்கிறார். புவனா தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். 

இதையும் படிங்க: தனியார் நிதிநிறுவன ஊழியர் எரித்துக்கொலை? பணம் வசூலிக்கச் சென்ற இடத்தில் சடலம் மீட்பு.. பதறவைக்கும் சம்பவம்.!

இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணிக்கு சென்ற சின்னமணி மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சாந்தி புதுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

Tiruvanamalai

தாய் - மகனுக்கு நேர்ந்த சோகம்

புகாரை ஏற்ற காவல்துறையினர் சின்னமணியை தேடி வருகின்றனர். இதனிடையே, செங்கம், நந்திமங்கலம் அருகேயுள்ள பனை ஓலப்பாடி சாலையில், சிறிய பாலத்தில் சின்னமலையின் சடலம் இருந்தது. 

இதுகுறித்து சாந்திக்கு காவல்துறையினர் தகவல் தெரிவிக்கவே, அவருக்கு அதிர்ச்சியில் நெஞ்சு வலி ஏற்பட்டு சரிந்து விழுந்து உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

இதையும் படிங்க: #JUSTIN: சண்டே கொண்டாட்டத்தில் ஓவர் குடி.. 19 வயது கல்லூரி மாணவி மரணம்.. சென்னையில் ஷாக்.!