ரிஷபத்தில் சந்திரன்-குரு.. கஜகேசரி யோகத்தால் 3 ராசிகளுக்கு பணமழை.!



kajakesari-yogam-in-rishaba-rasi-2025

கஜகேசரி யோகத்தால் சில ராசிகளுக்கு மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளப்போகும் யோகம் ஏற்பட்டுள்ளது. 

ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்களின் பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய யோகம் மற்றும் நஷ்டம் பலராலும் நம்பப்பட்டு வருகின்றது. அவரது ஜாதகத்தின் கிரக நிலைகளை பொருத்து அந்த ராசிக்கு உண்டான லாபமும் நஷ்டமும் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், வரும் மார்ச் 5ம் தேதி காலை 8 மணிக்கு மேல் சந்திரன் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 

kajakesari yogam

ஏற்கனவே ரிஷப ராசியில் குரு பகவான் இருந்து வருகின்றார். இந்த நிலையில், சந்திரனும் அதே ராசியில் சஞ்சரிக்க உள்ளார். எனவே, சந்திரன் மற்றும் குரு இருவரும் சேர்வதால் கஜகேசரி யோகம் ரிஷப ராசிக்கு கிடைக்கப் போகிறது. இந்த கஜகேசரி யோகத்தால் மற்ற சில ராசிகளின் வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்பட போகிறது. 

இதையும் படிங்க: வாரத்தின் முதல் நாள் ஏன் ஞாயிற்று கிழமையில் வருது தெரியுமா.?!

இந்த கஜகேசரி யோகத்தின் மூலம் கடகம், மேஷம், கன்னி உள்ளிட்ட ராசிகள் அதிகப்படியான நற்பலன்களை அனுபவிக்க இருக்கின்றன. இதுவரை அவர்கள் சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தற்போது விலகிவிடும். மேலும், திடீர் பண யோகத்தால் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த யோகத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் பணவரவு பல மடங்கு பெருகும்.