சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
"குளிர் கால சரும வறட்சியைப் போக்கும் அருமருந்து தேன்!" எப்படி பயன்படுத்தனும் தெரியுமா.?
குளிர்காலத்தில் நம் அனைவருக்கும் ஏற்படும் முக்கியமான பிரச்சனை தோல் வறண்டு போதல். இதனால் தோலில் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். இதை தீர்க்க ஒரு இயற்கையான சிறந்த வழி தான் "தேன்". மேலும் தேனில் பாக்டீரியா மற்றும் அழற்சியை எதிர்க்கும் பண்புகள் நிறைந்துள்ளன.
வீட்டிலேயே சொந்தமாக தேன் பேஸ்பேக்கை தயாரித்து இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பாதாம் எண்ணையுடன் இரண்டு தேக்கரண்டி தேனைக் கலக்கவேண்டும். இந்த எண்ணெய்க்கலவை சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும் கூடுதலான ஊட்டச்சத்து பலனைப் பெற ஒரு ஸ்பூன் தயிரை சேர்த்துக் கொள்ளலாம். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி சருமத்தை மிருதுவாக்குகிறது. முதலில் முகத்தை சுத்தம் செய்து, பின்னர் தேன் பேஸ்பேக்கை அப்ளை செய்ய வேண்டும்.
பின்னர் மிருதுவாக சில நிமிடங்கள் மசாஜ் செய்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறைந்து தோலின் நிறம் கூடி, மிகவும் இளமையாகவும், மென்மையாகவும் சருமம் மாறும்.